Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதென்ன கேவலம்? பிரியங்கா புகைப்படத்தை பார்த்து கோபமான சின்மயி

பாடகி சின்மயி எப்போதும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி டிவிட்டரில் பதிவு செய்வார்.

மீடூ பிரச்சனைக்கு பிறகு அதிகம் பகிர்ந்து வரும் இவர் தற்போது டிரெண்டாகிவரும் #10yearchallengeல் பிரியங்கா சோப்ரா குழந்தையுடன் இருப்பது போன்றும் 10 வருடத்திற்கு பிறகு அவர் கணவருடன் இருப்பது போன்றும் பதிவிட்டு இதென்ன கேவலம் என்பது போல கோபமாக கமெண்ட் செய்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா அவரது கணவரை விட 11 வயது மூத்தவர் என்பதை சுட்டிக்காட்டும்விதமாக இந்த மீம் அமைந்திருந்தது.

இதில் ஆண்கள் தங்களை விட 25 வயது இளைய பெண்ணை திருமணம் செய்தாலும் கண்டுகொள்வதில்லை. ஆனால் பெண்கள் திருமணம் செய்தால் மட்டும் இங்கு பெரிதாக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இதற்கு பலரும் இதை ஒரு மீமாக மட்டும் பாருங்கள் என்று கூறியிருந்தனர்.

ஒரு ரசிகர் நஸ்ரியாவின் திருமணம் அறிவிக்கப்பட்டதும் வந்த ஒரு மீமை ஷேர் செய்திருந்தார். இதில் நஸ்ரியாவை விட பகத்பாசில் 13 வருட மூத்தவர் என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர். இதையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டுள்ளார்.