Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் 2வது சீசன் தொடங்குகிறதா?- நடிகரின் டுவிட்

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் முதல் நபராக ஆர்யா கலந்துகொண்டார், அந்நிகழ்ச்சியில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் என்னால் இப்போது முடிவு எடுக்க முடியாது பின்பு அறிவிக்கிறேன் என்றார், ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. இந்த நேரத்தில் தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் ஆர்யா பதிவு செய்தார்.

அதைப் பார்த்ததும் நடிகர் சதீஷ், இல்லையே, பார்த்தால் எங்க வீட்டு மாப்பிள்ளை 2வது சீசனிற்கு தயாராவது போல் உள்ளதே என டுவிட் செய்துள்ளார்.