Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல லட்சம் ஏமாந்த சீரியல் நடிகர், நடு தெருவில் குடும்பம்- பரிதாப நிலைமை

கோலங்கள், திருமதி செல்வம் போன்ற ஹிட் சீரியல்களில் நடித்தவர் பிர்லா போஸ். இவர் தற்போது வீடு பறிபோகும் நிலைமையில் போலீஸை நாடி ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், நான் மதுரவாயல் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வாங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்து இந்த வீடு ஜப்தியில் உள்ளது. உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினர். எனக்கு எதுவும் புரியவில்லை. உண்மையில் இந்த வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் என்று இப்போது தான் தெரிய வந்தது.

என்னை வீடு சம்பந்தமாக சிலர் ஏமாற்றியுள்ளார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு கூட இதுகுறித்து ஒரு புகார் அளித்திருந்தேன், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.