Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் தங்கை டிடிக்காக அப்படி செய்தவர்களுக்கு மிகவும் நன்றி- உருகும் அக்கா பிரியதர்ஷினி

தொகுப்பாளினிகளில் நிகழ்ச்சியை எப்போது கலகலப்பாக கொண்டு போகக்கூடியவர் டிடி. இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலை அடிக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எப்போது காமெடி, கவுண்டர் அடித்து அவர் இருக்கும் நிகழ்ச்சியே சிரிப்பாக இருக்கும். அப்படிபட்ட அவர் ஒரு நிகழ்ச்சியில் அழுதது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்தது. டிடி தொலைக்காட்சிக்கு வந்து 20 வருடம் ஆனது என்று அவருக்கும் ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுத்தனர்.

அதாவது அவரது அப்பாவுடன் குடும்பமாக இருப்பது போல் ஒரு ஓவியம். அதைப்பார்த்ததும் டிடி, அவரது அக்கா, அம்மா என அனைவரும் அழுதுவிட்டனர்.

இந்த ஸ்பெஷல் தருணம் பற்றி டிடியின் அக்கா பிரியதர்ஷினி பேசும்போது, அந்த ஓவியம் நாங்கள் யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று, அந்த நிமிடம் அப்பாவே அங்கே வந்தது போல் இருந்தது.

ஏதோ ஷோ செய்தோம் ஒரு ஷீல்டு கொடுப்போம் என்றில்லாமல் அப்படி ஒரு விஷயம் செய்தவர்களை பாராட்ட வேண்டும். இதுபோல் கொடுக்க யோசித்தவர்களையும், வரைந்த ஓவியருக்கும் என்னோட பாராட்டுக்கள் என பேசியுள்ளார்.