Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி சானலில் விஜய் சேதுபதியை அசரவைத்த 6 வயது குழந்தை! இந்த சின்ன வயசில் இப்படியுமா

விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா முழுக்க தவிர்க்க முடியாத நபராகிவிட்டார். அவரின் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவர் சமூகத்தில் நிகழும் பல விசயங்கள் பற்றி தமது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துவருகிறார்.

இதனாலே அவர் செல்லும் இடங்களில் பத்திரிக்கையாளர்கள் கூடி நின்று மைக்கை அவரின் முன்னால் நீட்டி வருகின்றனர். அவரின் கருத்துக்களும் வைரலாகிவிடுகின்றன.

அண்மையில் சமூகவலைதளத்தில் பிரபலமானவர் சிறுமி ஹனிபா சாரா. வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த இவர் தன்னுடைய வீட்டில் கழிவறை கட்டவில்லை என தன் அப்பா மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்தவர்.

இந்நிலையில் சிறுமி சன் தொலைக்காட்சியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நம்ம ஊர் ஹீரோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். ஹனிபாவின் துணிச்சல் விஜய் சேதுபதியை மிகவும் கவர்ந்துவிட்டது.