Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கருக்கு போட்டியாக களத்தில் இறங்கிய உலக புகழ் பெற்ற விசித்திர ஜோடி! அதிர்ந்து போன அரங்கம்

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சியில் பல போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று பாட்டு திறமைக்கு பெயர் பெற்ற சூப்பர் சிங்கர். இதில் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கு என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது அந்த முக்கிய சானலில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ரித்விக், பூவையார் என டாப் லிஸ்டில் இருக்கிறார்கள். பூவையார் விஜய் 63 படத்திலும் நடித்துள்ளார்.

அதே போல அந்த சானலுக்கு போட்டியாக இருக்கும் இன்னொரு சானலில் சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மேடைக்கு வந்து பிரபலமானர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த மேடைக்கு யூடுயூப் பிரபலங்களான ஷாக்‌ஷி, ஸ்டேன்லி பிரபல ஜோடியாக வந்து போட்டியில் கலந்துகொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்த ஜோடி ஆண், பெண் என இரு குரலில் பாடி அசத்தி உலகளவில் தங்கள் திறமையால் ரசிகர்களை பெற்றவர்கள். இந்நிகழ்ச்சியில் பாட இருவருக்கும் கைதட்டும், வாழ்த்துக்களும் கொட்டியுள்ளது.