Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் யாரும் எதிர்பாராத பிரபல நடிகர்! மாஸ் ஹீரோவை தேடி சென்ற வாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மனதில் எப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதென அனைவரும் நன்கு அறிவார்கள். ஹிந்தியை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என மொழிகளிலும் பிக்பாஸ் வருகிறது.

தெலுங்கில் சீசன் 1 ஐ ஜூனியர் என்.டிஆர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு அந்த சானலுக்கு வர்த்தக ரீதியாக முன்னேற்றத்தை கொடுத்தது. ஆனால் சீசன் 2 சிறப்பாக அமையவில்லை.

இதை தொகுத்து வழங்கிய நானி போட்டியாளர்களிடத்தில் சரியான அணுகமுறையில்லை என குறை எழுந்தது. முந்தய சீசன் போல சுவாரசியமாக அமையவில்லை.

இந்நிலையில் விரைவில் வரப்போகும் சீசன் 3 க்காக மீண்டும் ஜூனியர் என்.டி,ஆரிடத்திடல் பேச்சு வார்த்தை நடைபெற அவர் ராஜமௌலி இயக்கும் RRR படத்தில் பிசியாக இருக்கிறார்.

இதனால் நிகழ்ச்சி தயாரிப்புக்குழு மற்றொரு மாஸ் நடிகரான நாகார்ஜூனாவிடத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.