டிவி சானலில் வார இறுதி என்றாலே இப்போது தொலைக்காட்சி ரசிகர்களுக்கு, ரசிகைகளுக்கு மிகுந்த கொண்டாட்டம் தான். சமீபத்தில் வந்த புது படங்கள் ஓரிரு மாதங்களிலேயே டிவியில் வந்து விடுகிறது.
அதிலும் சானல்களுக்கிடையே இந்த விசயத்தில் கடும் போட்டி. ஏற்கனவே சீரியல் ரியாலிட்டி ஷோக்கள் என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. TRP யிலும் எப்பாடு பட்டாவது இடம் பிடித்து விடுகிறார்.
இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி சானலில் வரும் ஞாயிறு அன்று காலையில் அவெஞ்சர்ஸ் என்ற மிரட்டலான ஹாலிவுட் படத்தை போடுகிறார்களாம்.
#AvengersInfinityWar தமிழில்.. 😎 ஏப்ரல் 21 காலை 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTelevision pic.twitter.com/xNIC5DBypL
— Vijay Television (@vijaytelevision) April 17, 2019