Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்து போன அம்மா இதை தான் சொல்வார்! கதறி அழுத பழைய ஜோக் தங்கதுறை - என்ன நடந்தது

டிவியில் காமெடி செய்யும் பிரபலங்கள் தற்போது மக்களிடம் அதிகம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமும் உண்டு. சிரிக்க வைப்பது என்றால் சும்மா வா?

புளியமரத்தடியிலே புஷ்பலதா மடியிலே என்றும், பழைய ஜோக் என்றும் பிரபலமானவர் தங்கதுறை. அவரை கிண்டல் செய்வது போல உடனிருக்கும் பலர் நடந்து கொண்டாலும் அவரை அனைவரும் அன்பு செய்கிறார்கள் என்பதே உண்மை.

இந்நிலையில் அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது தனது நீண்ட நாள் கனவு. பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் அம்மாவிடம் உன் பையன் என்ன செய்கிறான் என கேட்கும் போது அவன் விஜய் டிவிக்கு போயிருக்கிறான், நல்லா வந்துவிடுவான் என கூறுவாராம்.

ஆனால் இந்த விருதை நான் வாங்கிய நேரத்தில் அவர் என்னுடன் இல்லை என கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.