10 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் மானஸ்- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ
சின்னத்திரையில் வில்லனாக நடித்து கலக்கி வந்தவர் மானஸ். பிரபல சீரியலான வாணி ராணி தொடர்ந்து இப்போது மற்றொரு தொலைக்காட்சி சீரியலான அரண்மனை கிளி என்பதில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய 10 வருட காதலியான நீரஜா என்பவரை கடந்த திங்கட்கிழமை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து நீரஜா ஒரு பேட்டியில், எங்களுடைய 10 வருட காதல் கதை இப்போது நிறைவேறியுள்ளது, இரண்டு பேரும் பயங்கர சந்தோஷமாக இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.