Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 3 விசயத்தில் முக்கிய ரகசியத்தை உடைத்த சர்ச்சை நடிகை! ரசிகர்கள் ஷாக்

டிவி நிகழ்ச்சிகளில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்று பிக்பாஸ். விரைவில் இதன் சீசன் 3 வரப்போகிறது. இந்நிலையில் இது குறித்த பேச்சுகள் தான் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில் சீசன் 3 குறித்த தகவல் நாளுக்கு நாள் சுற்றி வருகிறது. முதல் சீசனனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இது நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் 2 ம் சீசனை நானி தொகுத்து வழங்க முந்தய சீசன் போல இல்லை என கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில் சீசன் 3 ஐ நாகார்ஜூனா அல்லது நடிகை அனுஷ்கா தொகுத்து வழங்குவார்கள் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்த சீசன் 3 ஐ நடிகர் வெங்கடேஷ் தான் தொகுத்து வழங்கவுள்ளார் என சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.