Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 3வது சீசனில் முதல் சீசன் போட்டியாளரா?- அவரே கூறிய தகவல்

தமிழ் தொலைக்காட்சியில் பெரிய பிரச்சனைகள், சர்ச்சைகளை சந்தித்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசன் வந்தபோது மக்கள் அவ்வளவாக ஏற்கவில்லை, பின் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இரண்டாவது சீசனுக்கு முதல் சீசன் போல் வரவேற்பு இல்லை என்பது உண்மை. தற்போது மூன்றாவது சீசன் ஜுன் மாதம் முதல் தொடங்க இருக்கிறது, அதில் யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் தகவல் வரவில்லை.

முதல் சீசனில் தனக்கு இருந்து நல்ல பெயரை நிகழ்ச்சி மூலம் கெடுத்துக் கொண்டவர் ஜுலி. இப்போது அவர் தொகுப்பாளினியாகவும், சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மூன்றாவது சீசனில் ஜுலி கலந்து கொள்கிறாரா என்று பேச்சு வர அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக நான் 3வது சீசனில் கலந்துகொள்ள மாட்டேன் என்கிறார்.