பிரபல தொலைக்காட்சி சீரியலில் பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சி- சின்மயி எடுத்த அதிரடி முடிவு, சீரியல் இனி வராதா?
சீரியல்கள் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு நாள் சீரியலை பார்க்கவில்லை என்றாலும் அவ்வளவு டென்ஷன் ஆகிவிடுவார்கள்.
அதை நாமே நமது வீட்டில் பார்த்திருப்போம், இப்படி பெரிய மக்கள் கூட்டத்தை கட்டிப்போட்டிருக்கும் சீரியல்கள் சரியாக இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். அதிலும் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன.
இந்த தகவலை ஒரு ரசிகர் பாடகி சின்மயியை டாக் செய்து டுவிட்டரில் போட அவர் இந்த விவரத்திற்கு புகார் அளிக்க கூறியிருக்கிறார். பெண்களை கற்பழிப்பது போன்று கூறுவதும், அதேபோல் பழிவாங்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் வந்தால் தனக்கு மெயில் செய்யுங்கள் என்றும் டுவிட்டரில் போட்டுள்ளார்.
அந்த ரசிகர் சொன்ன சீரியல் கல்யாண வீடு என்று கூறுகின்றனர்.
If you see content like this in your TV Serials in any languages, please Email the Information and Broadcasting ministry and the Ministers in charge. Even if it is a female villain calling for 'revenge gang rape'. @arunjaitley @Ra_THORe https://t.co/zCWSJWoWFh
— Chinmayi Sripaada (@Chinmayi) May 16, 2019