Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

60 ஆண்டுகால திரை பாரம்பரியம்! தூர்தர்ஷன் சேனலின் அதிரடி மாற்றம், ரசிகர்கள் ஷாக்

தூர்தர்ஷன் சேனலை திரை விரும்பிகள் எவராலும் மறக்க முடியாது. வாரம் ஒரு நாள் மட்டும் தமிழ் படம், தமிழ் பாடல், ஹிந்தியில் செய்திகள், கிரிக்கெட் போட்டிகள் என தூர்தர்ஷனின் பல நிகழ்ச்சிகள் மனதை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

தூர்தர்ஷன் கடந்த 1959ம் ஆண்டு பிரசார் பாரதியின் கீழ் துவக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு தூர்தர்ஷனிற்கு என சொந்தமாக இந்தியா முழுவதும் 23 சேனல்கள் இருக்கின்றன. சுமார் 60 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பிரபலமான லோகோவை மாற்ற முடிவு செய்தது.

இதற்காக கடந்த 2017ம் ஆண்டே தூர்தஷனிற்கான புதிய லோகோவை டிசைன் செய்யும் கண்டெஸ்டை நடத்தியது. 2017ம் ஆண்டு ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடந்த இந்த போட்டியில் சுமார் 10 ஆயிரம் புதிய லோகோக்கள் வந்து குவிந்தன. எவ்வளவு சேனல்கள் தோன்றினாலும், தூர்தர்ஷன் ஓர் எமோஷன் என்றே கூறலாம்.