Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குதித்த ராஜா ராணி சீரியல் புகழ் பிரபல நடிகை!

விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் மக்களின் மனங்களை மிகவும் கவர்ந்த ஒன்று ராஜா ராணி. இதில் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா, சஞ்சீவ் ஜோடி நிஜத்திலும் காதலர்களாகிவிட்டார்கள்.

இவர்கள் இருவரும் அதிக ரசிகர்கள், ரசிகைகளை பெற்றுவிட்டனர். இதில் அர்ச்சனா கேரக்டரில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி. அவருக்கு வழக்கமாக டப்பிங் பேசுவது யமுனா என்பவர் தானாம்.

இந்த சீரியலிலும் அவர் தான் டப்பிங் பேசி வருகிறாராம். யமுனாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கிறாராம். இதனால் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்த பின் தான் மீண்டும் டப்பிங் பேச வருவாராம். இதனால் ஸ்ரீதேவி தான் தனக்கு டப்பிங் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.