பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 டிவி ஒளிபரப்பு இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு வரவுள்ள இந்த நிகழ்ச்சியை காண பலரும் காத்திருக்கிறார்கள்.
இதில் அண்மையில் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்ற லிஸ்ட் சுற்றி வந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
இதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது கஸ்தூரி தான் அதில் கலந்துகொள்ளவில்லை என்பது போல மறைமுகமாக டிவீட் போட்டுள்ளார்.
அவர் தன்னுடைய பதிவில் போன் இல்லை, டிவி இல்லை, வெளியுலகத்துடன் தொடர்பு இல்லை, நான் எங்கே இருக்கிறேன். உங்களால் யூகிக்க முடியுமா? என கேட்டதோடு
மத்தியில் அமெரிக்காவில் தற்போது வனப்பிரதேசத்தில் கோடை சுற்றுலா சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பிக்பாஸில் இல்லை என தெரிகிறது.
No phone, no tv, no contact with the outside world... Where am I ??? Can you guess ? https://t.co/c4OxZ7QWww
— Kasturi Shankar (@KasthuriShankar) June 23, 2019