Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் தலைமை பதவியில் இவர்களா? கமலிடம் முறையிடும் மீரா, காரசாரமான அடுத்த ப்ரோமோ

பிக்பாஸ் வீட்டில் கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் பாத்திரம் கழுவுதல், சமையல், டாய்லெட் என ஒவ்வொரு துறைக்கும் ஒருத்தர் பதவி வகிப்பார். அவர்களுக்கெல்லாம் தலைவராக ஒருத்தர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதாவது கடந்த வாரம் தலைவராக இருந்த வனிதாவிற்கு பதிலாக ஒருத்தர் தேர்வாவார். அதை தான் தற்போது வந்துள்ள ப்ரோமோவும் காட்டுகிறது. அதில் கமல் போட்டியாளர்களில் நால்வரை தலைமை பதவிக்கு அழைக்கிறார்.

அதற்கு ரேஷ்மா, மீரா, முகேன், மோகன் எழுக்கின்றனர். அவர்களுக்கு கவின், சாண்டி என சிலர் கைத்தூக்கி ஓட்டளிக்கின்றனர். அதிலும் மீரா தலைமை பதவி பெண்ணிற்கு தான் வழங்க வேண்டும் என கமலிடம் முறையிட அதற்கு சரவணன் கமெண்ட் ஒன்றை அடிக்க மீராவின் முகம் சுருங்கிறது.