Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் தர்ஷனின் கையை யாருக்கும் தெரியாமல் பிடித்த மீரா- புகைப்பட ஆதாரம் இதோ

பிக்பாஸ் வீட்டில் தான் சொல்வது செய்வது தான் சரி என்ற மைண்ட் செட்டை ஆரம்பத்திலிருந்தே வைத்திருப்பவர் வனிதா. தன்னை எதிர்த்து வரும் போட்டியாளர்களையும் ஒன்று அணைத்து கொள்கிறார் அல்லது அவர்களை ஓரங்கட்டிவிடுகிறார்.

அப்படி தான் இன்று ஒருபடி மேல் சென்று தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் இந்த கேம் சரியில்லை. அது சரியில்லை, இது சரியில்லை என பிக்பாஸிடமே கத்தி கொண்டிருந்தார்.

இதனை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத தர்ஷன், இதை போட்டிக்கு முன்பே பேச வேண்டும். இடையில் சொல்ல கூடாது என்று கூற, வனிதா ஒன்றும் பேச முடியாமல், நீ இங்கிருந்து போ என தர்ஷனை அவ்விடத்தில் இருந்து காலி செய்வதற்கே குறியாக இருந்தார்.

இதையெல்லாம் ஒரு ஓரமாக பார்த்து கொண்டிருந்த மீரா ஷோபாவில் அமர்ந்திருந்த தர்ஷனின் கையை யாருக்கும் தெரியாமல் பிடித்து செம்ம என்பது போல் பாராட்டினார்.