Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதாவை அவர் முன்னிலையிலேயே திட்டிய லாஸ்லியா... கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வந்தபிறகும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதுபோல பேசிக்கொண்டிருந்தார். கமல்ஹாசன் அவரை செட்டிலேயே அமர்ந்து மற்றவர்கள் பேசுவதை கேட்கும்படி கூறினார்.

மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் வனிதாவிடம் உள்ள குறைகள் பற்றி பேசுங்கள் என கமல் கூறினார். அப்போது லாஸ்லியா, "நான் பார்த்தவரைக்கும் அவர் வந்த நாள் முதல், 'நான் சொல்வது தான் சரி' என்ற mindset அவருக்கு இருக்கு. இங்க நடக்கும் சின்ன சின்ன பிரச்சனையை அவர் குறுக்கிட்டு பெரிதாக மாற்றியது அவர் தான். நேற்று நடந்த சண்டைக்கு பிறகு தர்ஷன் தான் சாரி கேட்டார், ஆனால் வனிதா கேட்கவே இல்லை. அவ மன்னிப்பு கேட்டிருக்கனும்" என தைரியமாக கூறினார்.

அதற்கு செட்டில் இருந்த ரசிகர்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.