Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீ ஒரு கோழை.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை

பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேறியபிறகு சண்டை போட ஆள் இருக்காது என்று தான் ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் மற்ற போட்டியாளர்கள் நடுவிலும் தற்போது சண்டை துவங்கியுள்ளது.

மோகன் வைத்யா மற்றும் சரவணன் இருவரும் இன்று சண்டை போட்டுகொண்டனர். காலையில் அனைவரும் காபிக்காக காத்திருக்கும் வேலையில் மோகன் வைத்யா மற்றும் ஒரு கப் எடுத்து தனக்கு மட்டும் காபி போட்டுக்கொண்டார். அதை பார்த்து கோபமான சரவணன் அதை செய்கைகளில் கேட்டார்.

அதை தவறாக புரிந்துகொண்ட மோகன் வைத்யா பின்னர் கதறி அழுதார். இது பற்றிய பஞ்சாயத்து மற்ற போட்டியாளர்களிடமும் சென்றது. பிரச்னையை ஒருவழியாக பேசி தீர்த்தனர்.

ஆனால் அதன்பிறகு பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் செய்யும்போது 'மோகன் வைத்யா ஒரு கோழை' என கூறி சரவணன் அவரை வெறுப்பேற்றியுள்ளார். வரும் நாட்களில் இந்த சண்டை இன்னும் பெரிதாகும் என எதிர்பார்க்கலாம்.