Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலை மேலே இருந்து எடு டீ என்பதை டீசண்ட்டாக சொல்லி அனுப்பிய முகென்- வீடியோ பாருங்க

பிக்பாஸ் வீட்டில் முகென்-அபிராமி இடையே ஒரு டிராக் ஓடுகிறது. அது நட்பா, காதலா என ஒவ்வொரு நிகழ்ச்சியில் கேள்வி ஓடிக் கொண்டே இருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் முகென், சாண்டி, தர்ஷன், கவின் நான்கு பேரும் லிவ்விங் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அபிராமி, முகென் கால் மீது தனது காலை போட உடனே அவர் குரங் அஜார் என மலாய் மொழியில் ஏதோ கூறினார்.

மீண்டும் அதே வார்த்தையை முகென் சொல்ல ஒன்னும் புரியாமல் காலை எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் அபிராமி.

குரங் அஜார் என்றால் மலாய் மொழியில் மரியாதை குறைவாக நடப்பது என்று அர்த்தமாம்.