பிக்பாஸில் மீராவுடன் சண்டை! இணையத்தில் கசிந்த சாக்ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ
பிக்பாஸில் டிக்டிக்டிக் டாஸ்க்கின் போது சாண்டி, மீரா அங்கு அலாரம் அடிக்கும் இரு கடிகாரங்களை குறிப்பிட்ட நிமிடத்திற்குள் அணைக்க வேண்டும்.
ஆனால் சில நிமிடம் தள்ளிபோக, நீ சும்மா இருந்திருக்கலாம், சாண்டியே அந்த ரெண்டையும் எடுத்திருப்பான் என்று கவின் மீராவை சண்டைக்கு இழுத்தார். மீராவோ, அது எப்படி நான் என்ன செய்தாலும் தவறு கூறுகிறீர்கள் என்று சண்டைக்கு போக, உடனே வீட்டின் கேப்டன் சாக்ஷி, அனைவரையும் அழைத்து பேசுகிறேன், இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என கூறுகிறார்.
அனைவரும் வந்த பின்பு சாக்ஷி, இந்த மீட்டிங்கை வைக்க சொன்னதே மீரா தான் என கூறுகிறார். இதற்கு உடனே கோபமான மீரா, நான் மீட்டிங்கை வைக்க சொல்லவில்லை என்று கூற, நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா என்று சாக்ஷி கேட்க மீரா கண்ணீரேவிட்டுவிட்டார்.
இதற்கு உடனே சாக்ஷிக்கு ஒரு குறும்படம் போட்டு காட்ட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்கள் கேட்டு வர சாக்ஷிக்கான குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
#Sakshi pothitu irukiya nee than elathukum kaaranam kurumbadam no 2 @ikamalhaasan itha podalana enga Don @kaajalActress BB ku anupi set a pirichuduven 😁😊 #பிக்பாஸ்3 #BiggBossTamil3 pic.twitter.com/ugscnfzOyg
— SATA Sathiesh (@SataSathiesh) July 18, 2019