Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் மோகன் வைத்யாவை வெளியேற்றியதன் பின்னணி இதுதானா! மோசமான விமர்சனங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 எவிக்‌ஷன்கள் பிராசஸ் முடிந்துவிட்டன. இதில் 4 ம் வார இறுதியில் 3 வது நபராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட காரணம் அவர் மீதான மக்களின் விருப்பமின்மையால் ஓட்டு அவருக்கு விழவில்லை என்பதே நிகழ்ச்சியின் போக்கு.

ஆனால் சமூகவலைதளத்தில் அவர் மீது மோசமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக அவர் பெண் போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தம் கொஞ்சுவது, இடுப்பில் கை வைப்பது, ஓவர் ஆக்டிங் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கு மீம்ஸ் களும் ஒரு சாட்சி.

வீட்டிற்குள் கடைசியாக அவர் இருந்த போது, அங்கிருந்து வெளியே வந்து பிக்பாஸ் மேடைக்கு வந்த போதும் அவர் பேசியதும், நடந்து கொண்ட விதமும் சற்று முகம் சுளிப்பாகவே பலருக்கும் இருந்தது.

ஏற்கனவே இவரை போலி என பாத்திமா பாபுவும், நடிப்பு என வனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.