Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகன் கூறிய அந்த ஒரு வார்த்தை... கதறி அழுத பிக்பாஸ் ரேஷ்மா

பிக்பாஸில் இன்று நாட்டாமை டாஸ்க் போட்டியாளர்களுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் நாளை இந்த டாஸ்க் தொடரும் என பிக்பாஸ் அறிவித்தார்.

இதனையடுத்து நள்ளிரவில் அனைவரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது சரியாக 12 மணிக்கு பிக்பாஸ் பிறந்தநாள் பாடலை போட்டார்.

எதற்கு இந்த பாடல் என புரியாமல் அனைவரும் நிற்க சிலர் இன்று ரேஷ்மாவின் பிறந்தநாள் என கூறி வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சர்பிரைசாக ரேஷ்மாவின் மகன் வீடியோ மூலம் வாழ்த்து கூறினான்.

அந்த வீடியோவில் அவன் பேசுகையில், நான் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். மற்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் டாஸ்க்கை நீங்கள் செய்ததை பார்த்து பெருமையடைந்தேன். மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி முடிக்க ரேஷ்மா கதறி கதறி ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தார்.