Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாஸ்க்கிற்காக லொஸ்லியாவின் நிஜ அப்பா அம்மா மீது சத்தியம் போட சொன்ன சேரன்! அடுத்து நடந்தது என்ன

பிக்பாஸில் கடந்த இரு நாட்களாக நாட்டாமை டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் இரு கிராமத்தினராக பிரிந்து தங்களது டாஸ்க்களை செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் லொஸ்லியா, ரேஷ்மா உள்பட சில திருடர்களும் உள்ளனர். அவர்கள் பொருட்களை திருடி ஒளித்து வைக்க வேண்டும். அந்த வகையில் லொஸ்லியா செம்பு ஒன்றை கட்டில் படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்துவிடுகிறார்.

இந்த வழக்கு நாட்டாமை சேரனிடம் செல்கிறது. இதற்காக அவர் லொஸ்லியாவை சுடும் வெயிலில் நாற்காலியில் கட்டி போட்டு வைக்க, சில நிமிடங்கள் கழித்து தர்ஷன் அந்த செம்பை கண்டுப்பிடித்துவிடுகிறார்.

இருந்தாலும் லொஸ்லியாவை விடாத சேரன் இதுபோல் இனி செய்யமாட்டேன் என தனது அப்பா, அம்மா மீது சத்தியம் பண்ண சொல்கிறார். இது கொஞ்சம் டாஸ்க்கை தாண்டி லொஸ்லியாவை நேரடியாக பாதித்து உள்ளது போலும், சிரித்து கொண்டிருந்தவரின் முகம் சுருங்குகிறது. அதெல்லாம் பண்ண முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.