Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் ரேஷ்மாவின் இடுப்பையே உற்று பார்த்த ஆண் போட்டியாளர்! சேரனிடம் சென்ற பஞ்சாயத்து

நாட்டாமை டாஸ்க்கால் இரு தினங்களாக பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை கணக்கச்சிதமாக செய்து வருவது தான்.

குறிப்பாக, சரவணன் தனது வயதையும் மறந்து மிட்டா மிராசு கேரக்டராகவே வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மதுமிதாவிற்கு முத்தம் கொடுக்க சென்றவர், நேற்று ரேஷ்மாவின் இடுப்பையே உற்று பார்த்து ஏழரையை கூட்டியுள்ளார்.

இதனால் இந்த பஞ்சாயத்தை சேரனிடம் எடுத்து சென்ற ரேஷ்மா, மிட்டா மிராசு எனது இடுப்பையே உற்று பார்க்கிறார் என்று கூற சரவணனோ, உனது இடுப்பை மட்டுமா பார்க்கிறேன் என்ற பாணியில் பதில் கூறிவிட்டு அசால்ட்டாக நடந்து சென்றார்.

ஆனால் சில நிமிடங்கள் கழித்து நான் சும்மா தான் சொன்னேன் என கூறி சரவணனுக்கு ஆதரவாக நின்றார், ரேஷ்மா.