Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் அழகான இரு முக்கிய நடிகைகள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் கதையை பிரம்மாண்ட அளவில் படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். இது குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகின.

இப்படத்தில் வந்தி தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றார்கள். மேலும் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டயர் கேரக்டரில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.

தற்போது இப்படத்தில் அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ரூ 800 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.