Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்கள் விசயத்தில் பிக்பாஸ் சரவணன் செய்த மோசமான செயல்! கடுப்பான சின்மயியின் கோபமான பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 4 ம் கட்ட எவிக்‌ஷனனை நெருங்கிவிட்டது. இன்று வெளியேறப்போவது யார் என தெரிந்துவிடும். அந்த நபர் மீரா மிதுன் தான் என செய்திகள் சுற்றிவருகிறது.

இந்நிலையில் வார இறுதியான சனிக்கிழமை அதாவது நேற்று வந்த கமல் மீரா மிதுனை கேள்வி கணைகள் போட்டு சிக்கவைத்தார். சேரன் விசயத்தில் அவர் செய்த தவறையும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

இது ஒருபக்கம் இருக்கும் இசையில் பேசிக்கொண்டிருக்கும் போது சரவணன் நான் பஸ்ஸிஸ் பெண்களை உரசுவதற்காகவே சென்றிருக்கிறேன் என கூறினார். இதற்கு ஆடியன்ஸ் கைதட்டினார்கள். இந்த வீடியோ கிளிப்பை ஒருவர் சின்மயிக்கு டேக் போட்டுவிட அவர் இதை கண்டித்து பதில் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் ஒரு தமிழ் சானல் அந்த நபர் பெண்களை பலவந்தபடுத்துவதற்காக பஸ்ஸில் சென்றேன் என தைரியமாக கூறியதை ஒளிபரப்புகிறது. மக்களிடம் பாராட்டை பெறுவதற்காக. இது பார்வையாளர்களுக்கும் கைதட்டும் பெண்களுக்கும், பலவந்தப்படுத்தியவருக்கும் ஜோக்காக தெரிகிறது, கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளார்.