Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிலும் தல-தளபதி டிராமா..

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில சண்டை போட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர். நேற்று விஜய் பற்றி அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த மோசமான டேக் பற்றி பிரபலங்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் இன்று பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அஜித், விஜய், சிம்பு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் போல கெட்டப் போட்டு அவர்கள் போலவே இருக்கவேண்டு என கூறப்பட்டது.

அதில் கவின் அஜித் கெட்டப்பிலும், முகேன் விஜய் கேரக்டரிலும், சாண்டி சிம்பு போலவும் கெட்டப் போட்டனர். அவர்கள் அஜித்-விஜய் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்பதை காட்ட பல விஷயங்களை செய்தனர்.

விஜய் ஒருமுறை அஜித்திற்கு கடிகாரம் பரிசாக அளித்தது போலவும் அவர்கள் டிராமா செய்து காட்டினர்.

அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை ரசிகர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் பதிவு செய்தனர்.