Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பயந்து போன பிக்பாஸ் போட்டியாளர்கள்! மிரட்டலாக வந்த உலகநாயகனின் அடுத்த புரமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 5 வது எவிக்‌ஷனை பிராஸஸை எட்டிவிட்டது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் வருவது மேலும் சுவாரசியமாக இருக்கும்.

அந்த வகையில் இந்த வாரம் தொடர்ந்து நாமினேட் ஆகி எவிக்‌ஷன் வரை வந்த மதுமிதா இந்த வாரமும் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பதை கமல்ஹாசன் நேற்றே கூறிவிட்டார்.

அதே வேளையில் ரேஷ்மா தான் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என தகவல் சுற்றிவந்துகொண்டிருக்கின்றன. தற்போது கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்யும் கூத்துக்களை மறைமுகமாக கூறி சற்று பதற்றத்துடன் பேச அடுத்த புரமோ வெளியாகியுள்ளது.

அனைவரின் முகத்திலும் பயம் தெரிகிறது.