Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் சிம்புவை கலாய்த்த கமல்.. ஒரே வார்த்தைல இப்படி செஞ்சிட்டாரே மனுஷன்

பிக்பாஸில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேஷ்மா வெளியேறி பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளார். இது ஒருமுறமிருக்க, இன்று கமல் என்ன பேசுவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

அப்போது, சரவணன் நாங்கள் பிக்பாஸ் வீட்டில் நடிகர்களாக நடித்த கேரக்டர்களில் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டும் சார் என கேட்டார்.

கமலும், உடனே ஒகே என கூற, விஜயகாந்த் கேரக்டர் மூலம் சரவணன் நீங்கள் ஏன் நடிகர் சங்கத்தில் ஒரு பொறுப்பிலிருக்க கூடாது என கூறினார். அதற்கு கமல் நான் பொறுப்பிலிருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்பது அல்ல. ஆனால் நான் வெளியில் நின்று வேலை செய்து கொண்டே தான் இருக்கிறேன் என்று கூறினார்.

பின்பு, சிம்பு வேடத்தில் மாஸ்டர் சாண்டி கமலிடம் கேள்வி எழுப்பினார். அப்போது வாழ்க்கையில் யார் பர்ஸ்ட் போறானு முக்கியமில்ல, யார் லாஸ்ட்டா பர்ஸ்ட் வராங்கனு தான முக்கியம் என்ற டயலாக் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க சார். என்று கேட்க உடனே கமல் எந்த ஆங்கிள்ள இருந்து பாக்கனும்னுங்கிறது தான் முக்கியம் என சட்டென கலாய்த்துவிட்டார்.