Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வெடித்த மிகப்பெரிய போராட்டம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 50வது நாளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம்தோறும் கோடிக்கணக்கான வாக்குகள் பதிவாவதாக கமல் கூறிவருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஆபாசம், பலருடன் காதல் என பல கலாச்சார சீரழிவுக்கான விஷயங்கள் இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி நடத்தி வரும் இந்த ரியாலிட்டி ஷோவை தடை செய்யக்கோரி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடந்துள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அதிகம் பேர்பங்கேற்றுள்ளனர்.