Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்ரி படத்துல வர்ற மாதிரி பண்றீங்களா? பிக்பாஸில் பிரச்சனைக்கு நடுவிலும் இப்படியா

பிக்பாஸ் வீட்டில் இன்று மதுமிதாவால் பெரிய பிரளயமே வெடித்தது. இந்த வாரம் பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்கில் சரியாக செய்யாதது யார் என்கிற வாக்குவாதம் நடந்தது. அப்போது போட்டியாளர்கள் பலரும் கஸ்தூரி மற்றும் அபிராமி ஆகியோரின் பெயரை தான் தேர்ந்தெடுத்தனர்.

அவர்களும் ஜெயிலுக்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என கூறி கவினிடம் சண்டைக்கு சென்றார் மதுமிதா.

இந்த பிரச்சனையெல்லாம் முடிந்தபிறகு மதுமிதா, சேரன் மற்றும் வனிதா ஆகியோர் கிட்சனில் பேசிக்கொண்டிருந்தனர். அதை வெளியில் கார்டனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சாண்டி மற்றும் கவின் அவர்களுக்கு டப்பிங் கொடுத்து காமெடியாக பேசினர்.

இதை சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அபிராமி, "பத்ரி படத்தில் வருவது போல பண்றீங்களா?" என கேட்டு சிரித்துவிட்டார்.