Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் கையை அறுத்துகொண்டு விபரீத முடிவை எடுத்த மதுமிதா- உண்மையான காரணம் என்ன

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா வெளியேறுவது போலவும் அவரது கையில் கட்டு கட்டியுள்ளது போலவும் இன்று ப்ரோமோ ஒன்று வெளியாகியிருந்தது.

இதனால் மதுமிதா பிக்பாஸ் வீட்டினுள் ஏதோ விபரீத முடிவு எடுத்துள்ளார் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இதனாலேயே குறைவான ஓட்டுகளை பெற்ற அபிராமி வெளியேறாமல் மதுமிதா இன்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய இருந்ததாகவும் இதன் காரணமாக மதுமிதாவிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும், இதனையடுத்து உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சி என்ற விபரீத முடிவை எடுத்ததால் அவர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.