Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மதுமிதா கையை அறுத்துகொள்ள இந்த பெண் போட்டியாளர் தான் காரணமா? ஆனால்....

பிக்பாஸில் கடந்த சில நாட்களாகவே போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் மனமுடைந்த மதுமிதா கையை அறுத்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் பிக்பாஸும் மதுமிதாவை எலிமினேட் செய்துள்ளது. அவர் வெளியே வர காரணமாக கூறப்படுவது என்னவென்றால், நீச்சல் குளம் நிரப்பபடாததை பற்றி சேரன் மற்ற போட்டியாளர்களிடம் விவாதிக்க, வருண பகவான் கூட கர்நாடககாரர் போல தமிழகத்தை வஞ்சிக்கிறார் என மதுமிதா கூறியிருக்கிறார்.

இதை கேட்ட கர்நாடகாவை சேர்ந்த ஷெரீன், காவிரி பிரச்சனையை இங்கு கொண்டு வராதீர்கள் என கூற மதுமிதாவிற்கும் ஷெரீனுக்கு சண்டை முற்றியுள்ளது. இதனால் தான் மதுமிதா கையை அறுத்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியேறிய பின்னர், மதுமிதா உள்ளே இருக்கும் போட்டியாளர்களை திரை மூலம் காணும்போது முதலில் மதுமிதா என கத்தியது ஷெரீன் தான்.

இதனால் உண்மையில் பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.