Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது! கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா

பிக்பாஸில் கடந்த வாரத்தில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக வனிதா சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்தார்.

இதனால் அமைதியாக மாற முயற்சித்த போட்டியாளர்கள் மீண்டும் தங்களது சண்டைகளை ஆரம்பித்துவிட்டனர். மேலும் வனிதா பிக்பாஸ் விதிமுறைகளை மீறி வெளியில் போட்டியாளர்கள் குறித்து மக்கள் பேசுவதை உள்ளே வந்து பேசி வருகிறார்.

இது லொஸ்லியா உள்பட சில போட்டியாளர்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. என்னை பற்றி மக்கள் பேசுவதை என்னிடம் கூற வேண்டாம் என ஏற்கனவே கூறியதை லொஸ்லியாவிடம் மீண்டும் கமல் நேற்றைய எபிசோடில் கேட்க, வனிதாவை அருகில் வைத்து கொண்டே, மீண்டும் அதே வசனங்களை ஓப்பனாக கூறியுள்ளார்.