பிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா? வீடியோ ஆதாரம் இதோ

Topics : #Bigg Boss

பிக்பாஸில் இருந்து அதிக ஓட்டுகளை பெற்று வந்த மதுமிதா வெளியேறியது பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸின் மிக முக்கிய விதியான தற்கொலைக்கு முயற்சி செய்ய கூடாது என்பதை அவர் மீறியுள்ளதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மதுமிதாவின் இந்த செயலுக்கு காரணம், வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக ஆண்களுடன் மல்லுக்கு நின்று அவர்களது கோபத்திற்கு ஆளானது தான். இதனால் டென்ஷனான கவீன் மதுமிதாவை சில தகாத வார்த்தைகளால் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காரணம் ஆண்கள் மட்டும் இல்லை, சில பெண்களும் தான் என்பது கீழே உள்ள வீடியோவின் மூலம் தெரியவருகிறது.