Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சேரப்பா இனி வேற அப்பா! பிக்பாஸ் புதிய ப்ரோமோ

பிக்பாஸில் அப்பா-மகள் என ஆரம்பத்தில் இருந்தே அதிகம் நெருக்கமாக இருந்தனர் லாஸ்லியா மற்றும் இயக்குனர் சேரன்.

ஆனால் கடந்த வாரம் முழுவதும் லாஸ்லியா கவின் கேங்குடன் அதிகம் இருந்தார், மற்றொருபுறம் சேரன் மதுமிதாவுக்கு ஆதரவாக இருந்தார். இதனால் அவர்கள் இருவரும் பேசுவதை கூட நிறுத்திவிட்டனர்.

ஓபன் நாமினேஷன் நடந்தபோது கவின் பெயரை சேரன் நாமினேட் செய்ததற்கு பிறகு தான் லாஸ்லியா சேரனை விட்டு விலக ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த கமல், அவர்கள் பிரிவு பற்றி பேசி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். "புரியுது சார், ஆனால்.." என லாஸ்லியா சற்று தயக்கத்துடன் பேசுகிறார். இது தற்போது வந்துள்ள டீசரில் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சி ஜெயிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.