Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சேரனை பிரிந்தது இதனால்தான்.. கண்கலங்கி லாஸ்லியா சொன்ன காரணம்

பிக்பாஸ் 3வது சீசன் 56வது நாளை எட்டியுள்ளது. இந்த ஷோ துவங்கிய முதல் நாளில் இருந்தே சேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் நெருக்கமாகவே பழகி வருகின்றனர். அப்பா-மகள் என அவர்கள் சொல்வது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் சென்ற வாரம் முழுவதும் லாஸ்லியா சேரனிடம் பேசாமல் இருந்துவிட்டார். அதற்கான காரணம் என்ன என கமல் இன்று கேட்க லாஸ்லியா, "நான் இரண்டு வாரம் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தேன். அது கஷ்டமானது என தெரிந்தும் அவர் இந்த வாரமும் என்னுடைய பெயரை சொன்னார். அவருடன் நெருக்கமாக இருப்பதால் தான் அவரிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கிறேனோ என நினைத்தேன். அதனால் எதுவுமே வேணாம்.. அவரை விட்டு விலகினால் எனக்கு வருத்தம் இருக்காது என நினைத்து தான் இப்படி செய்தேன்" என லாஸ்லியா கூறினார்.