Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலிக்கவில்லை என கூறிவிட்டு அபிராமி போன பிறகு முகேன் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்

பிக்பாஸில் நடிகை ஆபிராமி முகேனை காதலிப்பதாக ஓப்பனாகவே கூறினார். ஆனால் அவர் தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாக கூறி அதை நிராகரித்தார்.

இந்நிலையில் இன்று அபிராமி பிக்பாஸ் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்டவர்கள் கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

மற்ற போட்டியாளர்கள் போலவே அபிராமி வெளியில் போகும் முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட மெடலை சுத்தி வைத்து உடைத்துவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார்.

முகேன் அபிராமி உடைத்த அந்த மெடலின் துகள்களை சேகரித்து மீண்டும் ஒட்ட துவங்கிவிட்டார். அபிராமியை காதலிக்கவில்லை என கூறிவிட்டு தற்போது இப்படி முகேன் செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.