Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு போட்டியாளர்களை மறைமுகமாக தாக்கி பேசிவிட்டு சென்ற அபிராமி

பிக்பாஸில் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் மதுமிதா வெளியேறியதை தொடர்ந்து இன்று அபிராமி பிக்பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

துவக்கத்தின் முதலே குறைவான வாக்குகளையே பெற்று வந்த அபிராமி வெளியேறியது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். இதனால் அவரும் சிரித்த முகத்துடனேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு திரை மூலம் மீண்டும் போட்டியாளர்களை சந்தித்த அபிராமி, அடுத்த வாரம் யாரை எலிமினேட்டிற்கு நாமினேட் செய்வது என்பதை இப்போதே யோசிச்சுக்கோங்க... ஏனென்றால் அடுத்த வாரம் நாமினேட் செய்ய நான் இருக்க மாட்டேன் என பிக்பாஸ் வீட்டினுள் பேசுவதை போலவே உருக்கமாகவும் அதே சமயம் போட்டியாளர்கள் அனைவரையும் தாக்கி பேசிவிட்டு சென்றுள்ளார்.

அபிராமி, கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.