Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்? எப்படியெல்லாம் நடிக்கிறார் பாருங்க

பிக்பாஸின் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே சேரனும் லொஸ்லியாவும் அப்பா- மகள் பாசத்தை கொட்டி வந்தனர். இதற்கு காரணம், தனது தந்தை போலவே சேரன் சார் உள்ளார் என்று லொஸ்லியா கூறியிருந்தார்.

ஆனால் லொஸ்லியா சிறைக்கு சென்று வந்ததில் இருந்து அவரது செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்ததால் சேரன் அவரிடம் இருந்து கொஞ்சம் விலகினார். இதனால் கடந்த வாரம் லொஸ்லியாவை நாமினேட்டும் செய்திருந்தார்.

மேலும் நாமினேட் செய்யும்போது, பசு தோல் போர்த்திய புலி என்று லொஸ்லியாவை பற்றி புரணி பேசி கொண்டிருந்தார். ஆனால் இன்றோ லொஸ்லியாவின் கையை பிடித்து கொண்டு மீண்டும் தனது தந்தை பாசத்தை பொழிந்து வருகிறார். இதனால் சேரன் நடிக்கிறாரோ என்று பார்வையாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், லொஸ்லியா இன்று கமலிடம் சேரனை பற்றி கண்ணீர் மல்க பேசியதால் தான் சேரன் இன்று லொஸ்லியாவிடம் மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார் என்று சேரன் ஆர்மியும் பதிலுக்கு விளக்கமளித்து வருகின்றனர்.