Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இருந்து அடுத்த வாரத்தில் கண்டிப்பாக இவர் வெளியேறமாட்டார்! அடுத்த கேப்டன் யார்

பிக்பாஸில் மதுமிதாவை தொடர்ந்து இன்று குறைவான வாக்குகளை பெற்றதால் அபிராமி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த வாரத்தில் யார் எலிமினேட் ஆகவுள்ளார் என்பது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த வாரத்தின் எபிசோடுகள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது உறுதி.

மேலும் அபிராமியை வெளியேற்றிவிட்டு பேசிய கமல், மதுமிதா வெளியேற்றப்பட்டுவிட்டதால், அடுத்த கேப்டன் தேர்ந்தெடுக்கபட வேண்டும். இதனால் மதுமிதா ஜெய்த்த டாஸ்க்கில் அவருக்கு அடுத்த இடத்தை பிடித்த தர்ஷன் அல்லது ஷெரீன் இருவரில் ஒருவர் கேப்டனாக வேண்டும் என கூறினார்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஷெரீனின் பெயரை கூற முதன்முறையாக பிக்பாஸின் கேப்டன் பதவியை ஏற்றார், ஷெரீன். மேலும் அவரை வரும் வாரத்தில் நாமினேட் செய்ய முடியாது எனவும் கமல் கூறினார். எனவே அடுத்த வார எலிமினேட் லிஸ்ட்டில் பார்வையாளர்கள் கணித்து வைத்திருந்த ஷெரீன் பிக்பாஸில் இருந்து வெளியேறமாட்டார்.