Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதற்காக தற்கொலை முயற்சி செய்தேன்- முதன்முறையாக கூறிய மதுமிதா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முதல் சீசனில் ஓவியா பல விஷயங்கள் செய்து வெளியேறினார்.

அப்படி 3வது சீசனில் வீட்டைவிட்டு வெளியேற மதுமிதா கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார், இது பரபரப்பாக பேசப்பட்டது.

முதன்முறையாக ஏன் அப்படி செய்தேன் என பேட்டி கொடுத்துள்ளார் மதுமிதா. அதில், நான் தைரியமான பெண், என் தைரியம் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பேன்.

நான் என் கருத்தை அங்கு வெளிப்படுத்தினேன், என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள் என்றார்கள். கடைசியில் யார் முட்டாள் என்று தெரியப்படுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.