Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய் இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால்- சீரியல் நடிகை ஷிவானியின் ஆசை

சீரியல்களில் நாயகிகளாக நடிக்கும் எல்லோருக்கும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே சீரியல்களில் நடித்து முன்னணி சீரியல் நாயகியாக வலம் வந்தவர் ஷிவானி.

இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் பிரபலமானார், தற்போது தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்க, அவர் தல-தளபதி, சூர்யா எல்லோரையும் பிடிக்கும். இவர்கள் கூட நடிக்கவில்லை என்றாலும் அதர்வாவுடன் கண்டிப்பாக நடிக்க வேண்டும்.

அவர்தான் என்னுடைய சமீபத்திய க்ரஷ் என பேசியுள்ளார் ஷிவானி.