Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஸ்தூரியை கேவலப்படுத்திய சாண்டிக்கு எதிராக போர்கொடி தூக்கிய நெட்டிசன்ஸ்!

பிக்பாஸில் நேற்றைய நிகழ்ச்சியில் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக அனைவருக்கும் பள்ளி பருவத்து கெட்டப் கொடுக்கப்பட்டது. இதில் சேரன் பள்ளி தலைமையாசிரியராகவும் கஸ்தூரி ஆசிரியராகவும் மாறியிருந்தனர்.

மற்றவர்கள் அனைவரும் மாணவர்களாக இருக்க அதில் ஒருவரான சாண்டி, டீச்சர் கஸ்தூரியை பார்த்து, இது டீச்சர் மாதிரி இல்லடா... சத்துணவு ஆயா மாதிரில இருக்கு என்று கேவலமாக காமெண்ட் அடித்தார்.

இதற்கு கஸ்தூரி பெருந்தன்மையாக எதுவும் சொல்லாவிடினும் நெட்டிசன்ஸ் சாண்டிக்கு எதிராக திரும்பியுள்ளனர். பிக்பாஸ் ஆரம்பித்த புதியதில் ஒரு ஹேட்டர்ஸை கூட பெறாமல் இருந்த சாண்டியை இந்த கமெண்ட்டிற்காக, சத்துணவு ஆயா என்றால் அவ்வளவு கேவலமா? என கேள்வி கேட்டு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இதனால் நாமினேட் லிஸ்ட்டில் உள்ள சாண்டிக்கு ஓட்டுக்கள் குறையும் என்று தெரிகிறது.