Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கஸ்தூரி கூறிய விஷயத்தால் சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு! அப்போதும் கேவலமாக சிரித்த சாண்டி

பிக்பாஸில் இன்றும் தொடர்ந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பள்ளி பருவத்திற்கு திரும்பினர்.

அதை தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியர்கள் குறித்து வீட்டு முற்றத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து பேசினர். அதில், கஸ்தூரி கூறிய விஷயங்கள் மிகவும் கவலையை ஏற்படுத்தியது. புற்றுநோயுடன் போராடி அதில் வெற்றி கண்ட தனது மகள் தான் தன்னுடைய ஆசான் என கஸ்தூரி கூறிய போது பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியது.

ஆனால் அப்போதும் சாண்டி சிரித்தப்படி இருந்தார். மேலும் அவருடன் பிக்பாஸ் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவராலும் கணிக்கப்பட்டுள்ள தர்ஷனும் சேர்ந்து சிரித்தப்படி ஏதோ பேசி கொண்டிருந்தனர்.

என்னதான் கஸ்தூரியை இவர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் அட்லீஸ்ட் சோகத்தில் உள்ளது போலவாவது முகத்தை வைத்திருக்கலாம். சாண்டிக்கும் ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.