Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொருள் சேதத்தால் தண்டனை பெறவுள்ளாரா முகேன்? எத்தனை லட்சம் வரை அபராதம் தெரியுமா

பிக்பாஸில் அபிராமியின் மீது இருந்த பிரியத்தால் கோபத்தில் அமர்ந்திருந்த கட்டிலை முகேன் சேதப்படுத்தினார்.

இது அந்த சமயத்தில் விவாத பொருளாகவும் நகைச்சுவை விஷயமாகவும் பார்க்கப்பட்டது. இதனால் முகேன் பிக்பாஸின் தண்டனைக்கு உள்ளாவாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சீசனின் போட்டியாளர் டேனி பேட்டி ஒன்றில் பிக்பாஸ் அக்ரிமெண்ட்டை காட்டி கூறுகையில், எனக்கு கொடுத்த அக்ரிமெண்ட் இது. இதில் போட்டியாளர் எலிமினேட் ஆகி போகும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்களை சேதப்படுத்தினால் அபராதம் இருக்கு. கிட்டத்தட்ட 50 ஆயிரத்தில் இருந்து 50 லட்சம் வரை அபராதம் உள்ளது என கூறினார். இதனால் முகேன் வெளியேறும்போது அபராதம் பெறுவது உறுதி.

அதேநேரம் மதுமிதா ஏன் இன்னும் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை? என்பதற்கு பதிலளிக்கயில், இதுவும் அக்ரிமெண்ட்டில் உள்ளது. எக்காரணம் கொண்டும் தொலைக்காட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி பேட்டி எதுவும் கொடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் அவர் வாய் திறக்காமல் உள்ளார் எனவும் கூறினார்.