Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் மீண்டும் ஆரம்பித்த வனிதா- கஸ்தூரி சண்டை! இதுக்கு ஒரு முடிவே இல்லயா

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக 45 நாட்களுக்கு பிறகு நுழைந்தவர் கஸ்தூரி. அப்போதெல்லாம் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் எப்போது எலிமினேட் ஆன வனிதா மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்தாரோ அப்போதே கஸ்தூரிக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. கஸ்தூரி என்ன செய்தாலும் சண்டைக்கு செல்கிறார், வனிதா.

அதிலும் நேற்று கிச்சனில் தும்பியதற்காக அவரிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனையை கேப்டன் ஷெரீனிடமும் எடுத்து சென்றார்.

கஸ்தூரியும் கையை மடக்கி கொண்டு மறைத்து தான் தும்பினேன், இப்படி தும்புவது சிறந்த முறை தான் என அமெரிக்கா மருத்துவமனையிலேயே கூறியுள்ளனர் என எப்படி எப்படியோ சமாளித்து பார்த்தும் வனிதா விடாமல் சண்டை செய்தார்.