Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு மட்டும் வேறொரு சட்டமா? சேரனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் பல காதல்கள் உருவாகி அழிந்தும் போகியுள்ளன. அதில் ஒன்றான கவீன்- லொஸ்லியா காதலை லொஸ்லியாவின் அப்பாவாக வாழ்ந்து வருகின்ற சேரன் எதிர்த்து வருகிறார்.

நேற்று கூட இதை பற்றி அவ்விருவரிடமும் சேரன் பேசினார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் மற்றொரு காதல் ஜோடியாக சுற்றுகின்ற தர்ஷன்- ஷெரீன் இடையே பிரச்சனை எழுந்தது.

இதனால் இருவரும் சண்டை போட்டு கொள்ள நடுவில் புகுந்த சேரன் இருவரிடமும், யாராவது விட்டு கொடுத்து போனால் தான் பிரச்சனை சுமூகமாகும் என்றெல்லாம் கூறி சண்டையை தீர்த்து வைத்தார்.

இதனால் லொஸ்லியாவுக்கு ஒரு சட்டம், ஷெரீனுக்கு ஒரு சட்டமா? என கேட்டு சேரனுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.